மாவடிப்பள்ளியில் அதிகரித்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளின் நடமாட்டம்! குவியும் மக்கள்
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பெரும்போக நெற்பயிர்ச்செய்கை அறுவடை முடியும் காலப்பகுதி, இந்நிலையில் தற்போது நூற்றுக்கு மேற்பட்ட காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
யானைகளின் அட்டகாசம்
இந்நிலையில், அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாக காணப்படுவதுடன், குறித்த காட்டு யானைக் கூட்டத்தைப் பார்வையிடுவதற்கு மக்களும் கூட்டம், கூட்டமாக, வருகை தருவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு, குறித்த காட்டு யானைகள் அப்பகுதியிலுள்ள ஆற்றுப்படுக்கைகளில் குட்டிகளுடன் குளிப்பதை அவதானிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இவ்வாறு தொடர்ந்தும் காட்டுயானைகள் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு, போன்ற பிரதேசங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம்.
ஆகவே, குறித்த யானைகளை காட்டுப்பகுதிக்குள் அனுப்புவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பிரதேச வாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











