டெங்கு நுளம்புகளின் பெருக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Laksi
நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, கடுமையான ஆபத்து உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இந்த நிலையில், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அபாயகரமாக உள்ள பகுதிகளில் சுமார் 60 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |