மட்டக்களப்பில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் நிலத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யானைகள் பெரும்போக வேளாண்மைச் செய்கையின் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன.
காட்டுயானைகளின் அட்டகாசம்
இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்டிருந்த பலத்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்கு முன்னமே இவ்வாறு காட்டு யானைகள் அழித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
அத்துடன், காட்டு யானைகளிடமிருந்து தமது வேளாண்மைச் செய்கையைப் பாதுகாப்பதற்காக இரவு முழுவதும் பாதுகாக்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து காட்டு யானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/5e095431-9587-45d1-b33a-c7877c6f0287/25-67ad690bd14d3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c41250bf-647b-4957-b672-2d8896753dfd/25-67ad690c8a098.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d674573c-ed5f-4c80-82cb-a1374293928f/25-67ad690d16a22.webp)