இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள்

Sri Lanka Tourism Tourist Visa
By Laksi Sep 12, 2024 09:38 AM GMT
Laksi

Laksi

இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளதாகவும் எண்ணிக்கை 218,350 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

சுற்றுலாப் பயணிகள்

அத்தோடு, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள் | Increase The Number Of Tourists Visiting Sri Lanka

இந்தநிலையில், இந்திய, பிரிட்டன் , ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகியநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: சஜித் பகிரங்கம்

தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: சஜித் பகிரங்கம்

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW