நாட்டில் நோய் பரவல்கள் அதிகரிப்பு
நாட்டில் தற்போது பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, இந்த நோய்த்தாக்கமானது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனை தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள்
இந்த நிலையில், இலங்கையில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தவறான தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 30,000 தவறான தொழில் செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |