ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
முறைப்பாடுகள் அதிகரிப்பு
மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 474 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் சட்டத்தினை மீறியமை குறித்து 450 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |