கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
Passport
By Laksi
இலங்கையில் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேரம் நீடிப்பு
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |