சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Aug 06, 2024 06:42 AM GMT
Laksi

Laksi

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது நிலையான வைப்புக்களுக்கான 8.5 வட்டி வீதத்தை 10 வட்டி வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

வட்டி வீதம் அதிகரிப்பு

நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு | Increase In Fixed Deposit Interest Rate

இந்நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான 8.5 வீத வட்டி வீதத்தை 10 வீதமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW