நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் சட்ட விதிமீறல்கள்

Election Commission of Sri Lanka Crime Election General Election 2024
By Laksi Oct 25, 2024 08:57 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில்  இதுவரை மொத்தமாக  662 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும் 15 ஏனைய முறைப்பாடுகளும் வன்முறை சம்பவம் தொடர்பில் 01 முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் 

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வன்முறைச் சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் சட்ட விதிமீறல்கள் | Increase In Election Violations

மேலும் ,இதுவரையான முறைப்பாடுகளில் 522 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 140 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW