நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில், 863 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 179 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகியுள்ளது.
மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கு மேலதிகமாக, நவம்பர் 4 ஆம் திகதியும் குறித்த அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |