காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்
அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் மாயமான முறையில் காணாமல் போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்தினுள் காணப்பட்ட 12 வெற்றுப்புத்தகங்கள் காணாமல் போனதையடுத்து அதிகாரி ஒருவரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
வாகனப் பதிவுப் புத்தகங்கள்
காணாமலாக்கப்பட்ட புத்தகங்களுடன் தொடர்பான இலக்கங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அப்புத்தகமானது மஞ்சள் நிறத்தில் காணப்படும் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பதிவுப்புத்தகங்கள் இருந்த அலுமாரியில் 1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணப்பட்ட நிலையில் குறிப்பிட்ட 12 புத்தகங்கள் மாத்திரமே காணாமல் போயுள்ளது.
மேலும் அலுமாரியானது உடைக்கப்பட்டு திருட்டுப்போயிருக்கலாம் என்ற கோணத்தில் நகர்ந்தாலும், அலுமாரியில் உடைக்கப்பட்டதற்கான எந்தவித சேதாரமும் காணப்படவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த அலுமாரி உள்ள அறையை நோக்கிய நிலையிலுள்ள கேமரா ஒன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் உதவி ஆணையரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதோடு மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |