சீரற்ற காலநிலை: அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

Colombo Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Climate Change Weather
By Laksi Oct 24, 2024 07:06 AM GMT
Laksi

Laksi

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,686 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இந்த மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அத்தோடு, அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் 10,460 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

டெங்கு நோயாளர்கள்

வடக்கு மாகாணத்தில் 4,836 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 4,347 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 4,207 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 3,208 நோயாளர்களும் வட மேல் மாகாணத்தில் 2,703 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலை: அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் | Inclement Weather To Increase Dengue

இந்த நிலையில், இதுவரை 20 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW