அம்பாறையில் சமூக சேவைகள் அபிவிருத்திக்கான ஒன்றியம் திறந்து வைப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் அலுவலகமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை(23) நற்பிட்டிமுனை – 05, 216 ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் நற்பிட்டிமுனை நாஸ்டோ அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் அதிதிகளின் கரங்களினால் வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அமைப்பின் தலைவர் ஐ.எல்.ஏ. குத்துஸ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வு முதலில் மௌலவி எப்.ஆர்.எம்.றிப்ஹான் (ஹாமி) கிராஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்டது.
நன்கொடை
அதனை தொடர்ந்து அமைப்பின் செயலாளர் அல் ஹாஜ் வீ.ரீ.கனூனால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதுடன் நிகழ்வின் நோக்கங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக நற்பிட்டிமுனை கமு/லாபிர் வித்தியாலய அதிபர் சீ. முகம்மட் நஜீப் , கல்முனை போக்குவரத்து சபை முகாமையாளர் வீ. ஜஹுபர், தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தர் எஸ்.ஜமால்தீன், நற்பிட்டிமுனை – 05 கிராம உத்தியோகத்தர் மௌலவி. ஏ.எல். கியாஸ், நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்கள், உயர் பீட உறுப்பினர்கள், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அலுவலக திறப்பு விழாவினை தொடர்ந்து நற்பிட்டிமுனை கமு / லாபிர் வித்தியாலய அதிபர் சீ. முகம்மட் நஜீப் அவர்கள் நற்பிட்டிமுனை கமு / லாபிர் வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டதனை பாராட்டி அவருக்காக நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட கதிரைப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் நற்பிட்டிமுனை நாஸ்டோ அமைப்பினால் சுமார் ஒரு இலட்சத்தி பதினெட்டாயிரம் ரூபாய் பெறுமதியான 50 கதிரைகளையும், ஜனாஸா கபனிடுவதற்கு தேவையான புடைவைத் துணியும் நற்பிட்டிமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |