6 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் செல்லுபடியற்றவை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமாக 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக தகவல் வெளியிடும் போதே அவர் குறித்த விடயத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முறை தேர்தலுக்கு வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி பெற்றிருந்தாலும் இதில் 11,815,246 பேரே வாக்களித்துள்ளனர் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான நாடாளுமன்ற தேர்தல்
இதன் போது செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006 ஆகவும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 6,67,240 ஆகவும் பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், குறித்த தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என பெப்ரல் (PAFRAL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |