அநுரவின் தலைமையில் புதிய அமைச்சரவை

Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet Sri Lankan Peoples President of Sri lanka National People's Power - NPP
By Rakshana MA Nov 16, 2024 06:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போதைய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு 160 நாடாளுமன்ற பதவிகளை வழங்கியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி!

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி!

இலங்கையின் எதிர்காலம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில் அவர், புதிய அமைச்சரவை அதிகபட்சமாக இருபத்தைந்து அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் அத்துடன் அதிகபட்சமாக இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளது.

Anuradhapura district president of National People

மேலும் நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும் என கூறியுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க கடந்த காலங்களில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது மக்கள் சக்தி

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது மக்கள் சக்தி

தமிழர்களுக்கு நன்றி! நம்பியவர்களை கைவிடாமல் பாதுகாப்பதாக ஜனாதிபதி தரப்பில் உறுதி

தமிழர்களுக்கு நன்றி! நம்பியவர்களை கைவிடாமல் பாதுகாப்பதாக ஜனாதிபதி தரப்பில் உறுதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW