மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்! அநுர அரசாங்கத்திற்கு ஓர் கோரிக்கை
மக்களின் எதிர்பார்ப்பு வித்தியாசமான ஒரு அரசியல் மாற்றத்தினை கொண்டு வருவது தான் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(05) இடம்பெற்ற அமர்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
மக்கள் பல்வேறு துயரங்களுக்கு இடையில் இந்த நாடாளுமன்ற தெரிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆகவே, இதில் மக்கள் எவ்வாறான அரசியலை விரும்புகின்றார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.
மதுபானசாலை அனுமதிப்பத்திரம்
அந்த அடிப்பைடையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் விமர்சிக்கும் இந்த அரசியல் கலாசாரத்தை விடுத்து நல்ல, மக்கள் எதிர்பார்க்கின்ற ஓர் உண்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தன. கடந்த தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்ட பிரதான பேசுபொருளாக காணப்பட்டதுடன் இன்று பெயர் பட்டியல் வெளியிடப்பட்டாலும் அதில் தெளிவின்மை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |