விற்பனை நிலையங்களில் திருட்டு : பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA Dec 15, 2024 12:39 PM GMT
Rakshana MA

Rakshana MA

பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத்தருமாறு பொலிஸார் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்கள் அதிகளவில் நடைபெற்று வரும் காரணத்தால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பல்பொருள் திருட்டு 

அண்மையில் பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கு மூவர் அடங்கிய கும்பல் சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல சில பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்துச் சென்றமை தொடர்பான காட்சிகள் விற்பனை நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

விற்பனை நிலையங்களில் திருட்டு : பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் | Important Notice From Jaffna Police

இந்த கும்பல் தொடர்ச்சியாக இது போன்ற திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW