குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள்

Sri Lanka Sri Lankan Peoples World
By Rakshana MA Nov 06, 2024 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

அல்லாஹ்வையும் அவரது ரஸூல் மற்றும் இறுதி நாளையும் உண்மை என ஏற்றுக்கொள்ளாது பொய்ப்பித்து நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே குப்ராகும் (இணைவைத்தல்).

சந்தேகம், ஆணவம், பெருமை அல்லது பொறாமை காரணமாக இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு ஈமான் கொள்ள மறுத்தலும் குப்ராக கருதப்படும்.

( عدم الإيمان بالله ورسله ، سواءً كان معه تكذيب أو لم يكن معه تكذيب ، بل شك وريب ، أو إعراض عن الإيمان حسدا ًأو كبراً أو اتباعا لبعض الأهواء الصارفة عن اتباع الرسالة فالكفر صفةٌ لكل من جحد شيئاٌ مما افترض الله تعالى الإيمان به ، بعد أن بلغه ذلك سواء جحد بقلبه دون لسانه، أو بلسانه دون قلبه ، أوبهما معاٌ ، أو عمل عملاٌ جاء النص بأنه مخرج له بذلك عن اسم الإيمان " انظر [مجموع الفتاوى لشيخ الإسلام ابن تيمية 12/)

மேலும் இறைத்தூதர்களை உண்மையென ஏற்றுக் கொண்டு, சில வெறுக்கக்கூடிய காரணங்களுக்காக விசுவாசம் கொள்ளாது நிராகரிப்பதும் குப்ராகும்.

சந்திரிகாவை கொலை செய்ய சதி : 50 இலிருந்து 30ஆக குறைக்கப்பட்ட பாதுகாவலர்கள்

சந்திரிகாவை கொலை செய்ய சதி : 50 இலிருந்து 30ஆக குறைக்கப்பட்ட பாதுகாவலர்கள்

இங்கு குப்ரானது இருவகைப்படுத்தப்படும்; ஒன்று பெரும் நிராகரிப்பு மற்றொன்று சிறிய நிராகரிப்பு.

1. பெரும் நிராகரிப்பு (குப்ர் அக்பர்)

இந்நிராகிப்பு முழுமையாக மார்க்கத்திலிருந்தே வெளியேற்றி விடும்; இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவையாவன,

முதலாவது பிரிவு: பொய்பித்து நிராகரிப்பதாகும்.

{وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْكَافِرِينَ}

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏக இறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (29:68)

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள் | Important Facts About Kubr In Islam

இரண்டாம் பிரிவு: உண்மையென புரிந்து கர்வம், ஆணவம் காரணமாக நிராகரிப்பது.

{وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ}

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (2:34)

மூன்றாவது பிரிவு: சந்தேகம் மற்றும் அகங்காரத்தின் காரணமாக நிராகிரப்பது.

وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا (35) وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا (36) قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا} (37) لَكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا }

தனக்குத்தானே தீங்கிழைத்தவனாக அவன் தனது சொத்துக்களைப் பார்த்து, அவற்றின் பெருமையைப் பற்றி எண்ணிக்கொண்டான்; அவன் தனது நண்பருக்குப் பேசும்போது, 'நான் உன்னைவிட அதிகம் செல்வந்தன், மேலும் எனக்கு அதிகமான மக்கள் உள்ளனர்' என்றான்."அவன் தனது நண்பருக்கு, 'எனக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதைக் கவனித்தால், நான் இறந்தால் கூட, நான் மறுபடியும் உயிர்ப்பெறுவேன்' என்று கூறினான். அவனுடன் உரையாடிய அவனது தோழர் "மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும் உன்னைப் படைத்துப் பின்னர் மனிதனாக உன்னைச் சீரமைத்தவனை நீ மறுக்கிறாயா?'' என்று கேட்டார் (18:35-38).

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள் | Important Facts About Kubr In Islam

இங்கு, செல்வம் மட்டுமே ஒரு நபரின் மதிப்பை நிர்ணயிக்காது, இறுதியில் அல்லாஹ்வின் நீதிக்கு உட்பட்டது .

நான்காவது பிரிவு: புறக்கணித்து நிராகரிப்பது.

{وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ}

மேலும், நிராகரிப்பவர்கள் தமக்கு (நல்லுபதேசங்களை) எச்சரிக்கப்பட்டதை விட்டும் விலகிக் கொள்கின்றனர். (46:3)

ஐந்தாவது பிரிவு: நயவஞ்சகம் காரணமாக நிராகரிப்பது.

{ذَلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُون}

ஏனெனில் அவர்கள் நம்பினார்கள், பின்னர் நம்ப மறுத்தார்கள், அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டிருந்தன, எனவே அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. (63:3) அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏகஇறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்கள் பூட்டப்பட்டு விட்டது இதனை அவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள்.

இப்பெரும் பாவத்தினை செய்யக்கூடியவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவதுடன் அவனது எல்லா நன்மைகளும் அழிந்து விடும் மேலும் இப்பாவத்தினை செய்யக்கூடியவன் நிரந்தர நரகவாதியாக தான் இருப்பான்.

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள் | Important Facts About Kubr In Islam

குப்ரு அக்பர் செய்யக்கூடியவனுக்கும் முஃமின்களுக்கு மிடையில் குரோதம் காணப்படும். முஃமின்கள் அவர்களை நேசிப்பதோ பாகாவலராக ஏற்பதோ கூடாது அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே!

இவ்வாறு, பெரும் பாவங்களில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பொதுவாக ஹராம் எனக் கருதப்படுகின்றன, ஆனால் அவர்கள் திருந்தி பாவமன்னிப்பு செய்யும் போது மீண்டும் ஹலால் ஆகலாம்.

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை!

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை!

2. சிறிய நிராகரிப்பு (குப்ரு அஸ்கர்)

இது மார்க்கத்திலிருந்து வெளியேற்றாது இது அமல் சார்ந்த குப்ராகும். இது அல்குர்ஆனும் சுன்னாவும் குப்ரு என குறிப்பிடும் பாவங்களை இது குறிப்பிடும் ஆனால் இது குப்ரு அக்பர் என்ற நிலைக்கு இட்டுச் செல்லாது.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிப்பது இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

மேலும்,  {وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا قَرْيَةًۭ كَانَتْ ءَامِنَةًۭ مُّطْمَئِنَّةًۭ يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًۭا مِّن كُلِّ مَكَانٍۢ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ}

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது பாதுகாப்பாகவும், நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. அவ்வூருக்குரிய ஒவ்வொரு உணவு தாராளமாக அவ்வூரை வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்துவிட்டது. எனவே அவர்கள் நன்றி மறந்து செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான். (16:112)

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள் | Important Facts About Kubr In Islam

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்வது

{بْنُ عُمَرَ: لَا يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ}

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் இணைவைத்து விட்டான், குப்ரு செய்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர்(ரலி) (நூல் திர்மிதி 1535)

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது

{عَنْ جَرِيرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» فَقَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ}

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியான பிறகு) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார். ( நூல் : புஹாரி 121)

{وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}

நம்பிக்கையாளர்களில் இருசாரார் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் (49:9).

ஒரு முஸ்லிமை கொலை செய்வது 

{عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ}

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒரு முஸ்லிமை இழிவுபடுத்துவதும், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதும் பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்.” (நூல் : முஸ்லிம் 116 )

குப்ரு அஸ்கர் செய்பவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடாதவனாகவும் அவனது நன்மைகைளயும் அழித்து விடாததாகவும் இருக்கும். அவனது செயலுக்கேற்ப நன்மைகள் குறைந்து போகக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நிலையை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அவன் எச்சரிக்கைக்கு உட்பட்டவனாக இருப்பான்.

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள் | Important Facts About Kubr In Islam

குப்ரு அஸ்கர் செய்பவன் நரகத்தில் நுழைந்தாலும் நிரந்தரமாக இருக்கமாட்டான்; அல்லாஹ் அவனது குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடியவனாக இருப்பான்.

சிறு பாவங்களில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பொதுவாக ஹலால் எனக் கருதப்படுகின்றன, ஆனால் பெரும் பாவங்களில் ஈடுபட்டால் அவை ஹராம் ஆகலாம். இவர்களை ஒரேயடியாக பகைக்ககூடாது ஏனென்றால் அவன் அவனது ஈமானுக்கேற்ப நேசிக்கப்படவோ அல்லது அவனது பாவங்களுக்கேற்ப வெறுக்கப்படவோ கூடும் .

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW