சந்திரிகாவை கொலை செய்ய சதி : 50 இலிருந்து 30ஆக குறைக்கப்பட்ட பாதுகாவலர்கள்

Chandrika Kumaratunga Mahinda Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Political Development
By Rakshana MA Nov 05, 2024 03:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

எனது கணவரை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல என்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு (Ravi Senaviratna) எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறியினால் (Ajith Hemasri) ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

விடுதலை புலிகளின் பகிரங்க அறிக்கை

மேலும் தெரிவிக்கையில், மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 109, 200 மற்றும் 243 என பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு மாத்திரம் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது புரியாத புதிராகவே இருப்பதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சந்திரிகாவை கொலை செய்ய சதி : 50 இலிருந்து 30ஆக குறைக்கப்பட்ட பாதுகாவலர்கள் | 50 Guards Reduced Amid Plot To Kill Chandrika

தொடர்ந்தும் அக்கடிதத்தில், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் நான் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஒரு ஜனாதிபதி நான் தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தான் ஓய்வு பெற்றாலும் தன்னைக் கொன்று விடுவோம் என விடுதலைப் புலிகள் அமைப்பு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு

மேலும், முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவிடம் (Mahinda Rajapaksa) 63 இராணுவத்தினர் மற்றும் 180 பொலிஸார் அடங்கிய 243 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மைத்திரிபால சிறிசேனவிடம் (Maithripala Sirisena) 109 பொலிஸாரும், கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) 25 பொலிஸார், 175 இராணுவத்தினருடன் 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளனர்.

சந்திரிகாவை கொலை செய்ய சதி : 50 இலிருந்து 30ஆக குறைக்கப்பட்ட பாதுகாவலர்கள் | 50 Guards Reduced Amid Plot To Kill Chandrika

ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆட்சிக்கு வரும்போது உயரடுக்கு பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பி தலைவர்கள் தெரிவித்த போதிலும், எமது நாட்டின் உயரதிகாரிகளுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்வதாலேயே அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நூற்றுக்கணக்கான அரசாங்கத் தலைவர்களுக்கு பாதுகாப்புப் படைகள் வழங்கப்பட்டதா என முன்னாள் ஜனாதிபதி குறித்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

இந்திய அரசினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW