ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு, தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் ஆனந்த ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |