விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 08:51 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த உதவியாளருக்கு சில நிபத்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

உதவியாளர்

அவற்றில், குறித்த உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு | Important Announcement From Election Commission

அத்தோடு, ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி பிராந்திய பிரதிநிதியாகவோ அல்லது வாக்குச் சாவடி பிரதிநிதியாகப் பணியாற்றாத நபராக இருக்க வேண்டும்.

மேலும், உதவியாளர் எந்தவித ஊனமும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

காத்தான்குடியில் 23 பேர் கைது

காத்தான்குடியில் 23 பேர் கைது

தேர்தல் ஆணைக்குழு

மேற்படி உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம், கிராம அலுவலர் அலுவலகம் அல்லது www.elections.gov.lk இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு | Important Announcement From Election Commission

பார்வைக் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் உடல் ஊனமுற்றோர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து கிராம அலுவலரிடம் சமர்ப்பித்து சான்றிதழைப் பெற வேண்டும்.

அதன் பிறகு அரசு மருத்துவ அலுவலரிடம் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு வாக்காளரின் உடல் தகுதி பதிவு செய்யப்பட்டு சான்றளிக்கப்படுகிறது.

மேலும், பார்வையற்றோர் அல்லது வேறு ஏதேனும் உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் உரிய உடற்தகுதி சான்றிதழை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம்

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW