முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

A H M Fowzie Sri Lanka Law and Order
By Rukshy Aug 27, 2024 06:22 AM GMT
Rukshy

Rukshy

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

ஏ. எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதோடு அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சிரேஷ்ட அரசியல்வாதி 

2010 இல், பௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின் சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு | 2 Years Rigorous Imprisonment Ex Minister Fowzie

இதன்போது ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு செயற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எனினும் அவர் முதல் சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.  

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW