கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு
Kilinochchi
By Mayuri
கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் உயிரிழப்பு
விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பேருந்தை முந்திச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |