அம்பாறையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்: பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 30, 2024 08:52 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வீரமுனை ,மருதமுனை, மண்டூர் , பகுதிகளில் அகிகளவான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள் உடைத்து திருடும் சம்பவம் இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன் வீட்டின் ஜன்னல் கம்பிகள் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

திருட்டுச் சம்பவங்கள்

இதேவேளை , மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு வருவதோடு சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அம்பாறையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்: பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் | Important Announcement By The Police To The Public

எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன், வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும் கம்பியை உறுதியான வகையில் பொருத்தி கொள்ளுமாறும், கூரை மின் விசிறி பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக முகக்கவசம் மற்றும் தொப்பி அல்லது தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்: பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் | Important Announcement By The Police To The Public

எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை

வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW