வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை

Jaffna Netball Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Oct 30, 2024 05:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் தற்போதைய பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கு பயிற்றுவிப்பாளராக தான் பொறுப்பேற்றுள்ளதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் இப்பதவிக்கு போதுமான நிலை 1 சான்றிதழ் உள்ளதாக கூறிய அவர் மேலும் நிலை 2 மற்றும் நிலை 3 பயிற்சி சான்றிதழ்களையும் பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பூஸா சிறைச்சாலை

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பூஸா சிறைச்சாலை

இலங்கை பிரதிநிதி

நான்கு உலக கிண்ண மற்றும் ஐந்து ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இலங்கையை பிரதிதித்துவப்படுத்திய அவர், 2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற கேப் டவுன் உலகக் கிண்ண போட்டியின் பிறகு அணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தர்ஜினி தனது கணவருடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பார்வையாளராக பங்கேற்றிருந்துள்ளார்.

வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக யாழ்ப்பாண வீராங்கனை | Jaffna Star Woman Becomes Netball Coach

இப் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இப்பின்னடைவை அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தர்ஜினி சிவலிங்கம் ஏற்கனவே அதிகளவான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் அதில் அனுபவம்கொண்ட அவர் தற்போதைய இலங்கை அணிக்கு உள்நாட்டில் அனுபவம் உள்ள போதிலும் சர்வதேசத்துடன் இணைந்து போட்டியிட அனுபவம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடருந்துகளில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள்: வெளியிடப்பட்டுள்ள காரணம்

தொடருந்துகளில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள்: வெளியிடப்பட்டுள்ள காரணம்

தேர்தல் அத்துமீறல்களால் இதுவரையில் 100 பேர் கைது

தேர்தல் அத்துமீறல்களால் இதுவரையில் 100 பேர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW