மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Education School Children
By Laksi Oct 08, 2024 07:19 AM GMT
Laksi

Laksi

பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்பதுடன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

மதிய உணவு வழங்கும் திட்டம்

அத்தோடு, அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Important Announcement By Ministry Of Education

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW