இலங்கையின் முக்கிய அரசாங்க மருத்துவமனைகளி்ல் பாதிக்கப்பட்டுள்ள சேவைகள்
அரசாங்க மருத்துவமனைகளில் எக்ஸ்ரே உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் எட்டு முக்கிய அரசாங்க மருத்துவமனைகளில் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனர் , எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் மற்றும் இருதய கெதீட்டர் உள்ளிட்ட கருவிகளை இயக்குபவர்களை பணிக்கு இணைத்துக் கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சு துரித நடவடிக்கை
அதன் காரணமாக தற்போதைய நிலையில் முக்கிய அரசாங்க மருத்துவமனைகளில் அவ்வாறான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் நோயாளிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக தற்போதைக்கு புதிய மருத்துவமனைகள் பலவற்றில் மேற்குறித்த கருவிகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற அலுவலர்கள் இல்லாமை காரணமாக, பொருத்தப்பட்ட கருவிகள் வெறுமனே வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு துரித நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்று துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |