ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.
விசேட பேச்சுவார்த்தை
இதன்போது, இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பேணுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க, தென்கிழக்காசிய மற்றும் மத்திய பொருளாதார விவகாரங்கள் (இருதரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |