இலங்கை மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கை மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதி அபாயத்தை குறைக்க, இலங்கை மின்சாரச் செலவுகளை ஈடுகட்டும் வகையிலான கட்டணங்களை விரைவில் திருத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மின்சாரக்கட்டணம்
இவ்வாறு மின்சார கட்டணம் சரி செய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும்.
அத்துடன் வரி செலுத்துவோர் மீது இன்னும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் சுமை
நாணய நிதியம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை நிறைவேற்றுவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |