வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு! நேரில் சென்ற சாணக்கியன்

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Eastern Province
By Rakshana MA Dec 25, 2024 02:38 PM GMT
Rakshana MA

Rakshana MA

வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப் பகுதியில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட செய்தியினை பிரதேச கடற்றொழிலாளர் அமைப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் காரணத்தால் நேற்று(24) குறித்த துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

துறைமுகப் பகுதியின் அருகாமையில் உள்ள ஆற்றோர அரச காணி ஒன்றினை கடற்றொழிலாளர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள், படகு நிறுத்தும் செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த நிலையில், முன்னாள் பிரதேச அரசியல் வாதி ஒருவரின் சகோதரர்களில் ஒருவர் ஆற்றோடு சேர்த்து வேலிக் கட்டைகள் இட்டு அடைத்துள்ளதாகவும் அடைக்கப்பட்ட கட்டைகளை அகற்றி தருமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பயனாளிகளின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்க புதிய வர்த்தமானி வெளியீடு

நிவாரணப் பயனாளிகளின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்க புதிய வர்த்தமானி வெளியீடு

கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த விடயம் தொடர்பான பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு! நேரில் சென்ற சாணக்கியன் | Illegal Land Grabbing In Valaichenai

ஆற்றங்கரையோடு உள்ள காணிகளில் குறிப்பிட்டளவு பிரதேசம் அரசாங்கத்திற்கு சொந்தமானது. அவற்றினை தனியார் அபகரிக்கமுடியாது.

வேலி இடவோ,மதில் கட்டவோ முடியாது. ஆனால் அதனை பராமரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக கடற்றொழிலாளர்அமைப்பு பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

விசாரணை

இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை முன்னாள் அரசியல்வாதியின் சகோதரர் அவரது அடியாட்களுக்கும் கடற்றொழிலாளர் சிலருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு! நேரில் சென்ற சாணக்கியன் | Illegal Land Grabbing In Valaichenai

இதேவேளை தங்களது காணியின் கட்டைகள் சிலவற்றை கடற்றொழிலாளர்கள் சிலர் இரவோடு இரவாக அகற்றியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கெதிராக முறைப்பாட்டினை கல்குடா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், தாம் செய்யாத குற்றச் செயலை செய்தாக தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக கடற்றொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

கல்முனை - சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் நோக்கி வான்வழித் தாக்குதல் : 15 பேர் பலி

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் நோக்கி வான்வழித் தாக்குதல் : 15 பேர் பலி

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery