பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Dec 22, 2024 04:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று ஓமந்தை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் சேமமடு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் மோசடிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

சுற்றிவளைப்பு

இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லிலீட்டர் கோடா மற்றும் 150,000 மில்லிலீட்டர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபான உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு : சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Brewery Raided By Police

அத்துடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பல இளைஞர்கள் குறித்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்திவிட்டு அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் அப்பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களிற்கு நீராட சென்று உயிரிழந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியை கொலை செய்ய முன்னெடுத்த திட்டம் தொடர்பில் விசாரணை

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

அதிகம் பகிரப்பட்டு வரும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW