சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு

Ramadan Sri Lankan Peoples Iftar
By Rakshana MA Mar 16, 2025 06:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ.அஜீஸ் தலைமையில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கம்பளை புகையிர நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்

கம்பளை புகையிர நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்

ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு

இதில் விசேடமாக சாய்ந்தமருது பிரதேச 17 பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்களும் , நிர்வாக கிராம நிலதாரி எம்.எஸ்.எம்.நளீம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சமாதான நீதவான்களின் பிரிவு வாரியாக சமாதான நீதவான்களின் விபரங்கள் கொண்ட மலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு | Iftar Event At Sainthamaruthu Justices Association

இப்தார் விசேட பயான் உரையை அஷ்ஷேக் மௌலவி ஏ.எம்.ஏ.ஜப்பார்  நிகழ்த்தியுள்ளதுடன், ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பையின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு | Iftar Event At Sainthamaruthu Justices Association

மேலும் குறித்த இந்நிகழ்வுக்கு, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.எம். இப்னு அஸார் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உப தலைவருமான எம்.எஸ்.எம்.முபாறக், ஒன்றியத்தின் ஆலோசகரும் நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டத்தரணி சௌபி எச்.இஸ்மாயில், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் தலைவர் ஏ.எம்.சலீம் (சர்கி) மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ள ரிஷாட் கட்சி

ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ள ரிஷாட் கட்சி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery