மத ஒற்றுமைக்கான கல்முனையில் சிறப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கில் கல்முனையில், பிற மதத்தவர்களுடனான இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த வருடாந்த இப்தார் வைபவம் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் பணிமனை கேட்போர் கூடத்தில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
சிறப்பு நடவடிக்கை
இந்நிகழ்வின் ரமழான் சிந்தனையை கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.எச்.எம்.இர்பாத் (ரஷாதி) நிகழ்த்தியுள்ளார்.
மேலும், இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹீர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |