ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வு

Ramadan Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Iftar Presidential Update
By Rakshana MA Mar 15, 2025 06:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு அலரி மாளிகையில் நேற்று(14) இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான முஸலிம்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.

முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி

முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி

இப்தார் நிகழ்வு 

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வு | Iftar Ceremony Held With Participation Of Anura

செயிக் அப்துல்லா ஷஹீட் மௌலவியினால்“ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.

சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு துறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது. அதனை அடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பெண்கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை

பெண்கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை

கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery