இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி, சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணை
கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், அஜர்பைஜான் எல்லைக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியபோது, விமானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு பேர் அதிகம் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |