இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அஹமட் பயிலா கைது
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அஹமட் பயிலா (Hussein Ahamed Bhaila), 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு சுமார் தொண்ணூற்று ஒன்பது கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் படி, அவர் தனது பதவிக் காலத்தில் எந்த தேவையும் இல்லாமல் 50 தற்காலிக கிடங்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகவும், அதற்குச் சமமான தொகையை வெளிப்புறத் தரப்பினருக்கு இலாபமாகப் பெற்றுக் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அதன்படி அஹமட் பயிலா இன்று (3110.2025) காலை சுமார் 8.30 மணியளவில் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
2015 பெப்ரவரி முதல் அக்டோபர் வரை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய பயிலா, 2004 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
அத்துடன் அந்தக் காலகட்டத்தில், அவர் பல பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்தார், அவற்றில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தேசிய தொழில் முயற்சி மேம்பாடு (2004–2005), திட்ட அமுலாக்கம் (2005–2007), மற்றும் வெளிவிவகாரம் (2007–2010) ஆகியவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |