சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழிப்பு: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இதுவரையான காலப்பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, 2,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
ஜனாதிபதி தேர்தல்
மேலும், தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 65 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |