புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 30, 2024 07:53 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியில் கடந்த 28 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி படகுகள் மற்றும் ஒரு தெப்பம் என்பனவற்றை கடற்படையினர் சோதனை செய்த போதே இந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

மேலதிக சட்ட நடவடிக்கை

இதன்போது, 1042  கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 33 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Huge Amount Of Beedi Leaves Recovered In Puttalam

மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும், ஒரு தெப்பமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW