இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Aug 30, 2024 02:53 AM GMT

இலங்கையில் அண்மைய காலமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்தியர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

விரைவான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்றவை இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு இல்லாமை, குறைந்த கல்வி நிலைகள் மற்றும் வறுமை ஆகியவை சுவாச நோய்களின் பரவலுக்கு பங்களிக்கிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் | Increasing Respiratory Diseases

இந்த சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக விழிப்புணர்வு மற்றும் கல்வியின் அவசியம் தேவையாக உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW