இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேட்பாளர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுவதுடன், இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு
இதன் அடிப்படையில், மொத்தமாக 225 உறுப்பினர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் ஆணையகத்தின் தகவல்படி, குறித்த 8,821 வேட்பாளர்களில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் ஏனையோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |