இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கையளிப்பு!
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய திருகோணமலை மாவட்ட பயனாளர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கன்னியா பிரதேசத்தில் நேற்று(25) இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது நிலைபேறான மீள்குடியேற்றத்திற்கும் மீள் ஒருங்கிணைவுக்குமான விரிவாக்கப்பட்ட ஆதரவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டம்
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் இவ்வீடுகள் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
இதனை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமார மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
இதன்படி, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலிருந்து 16 பயனாளிகளுக்கும், குச்சவெளி பிரதேச செயலகத்திலிருந்து 17 பயனாளிகளுக்கும், மொறவெவ பிரதேச செயலகத்திலிருந்து 07 பயனாளிகளுக்கும் மொத்தமாக 40 பயனாளிகளுக்கும் இவ்வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இதன்போது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் நா. மதிவண்ணன், UNDP நிறுவனத்தின் திட்ட நிபுணர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



