மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு

Sri Lanka Accident Kalmunai Weather Floods In Sri Lanka
By Rakshana MA Dec 08, 2024 06:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாவடிப்பள்ளியில் உயிர்களை காப்பாற்ற போராடியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், விசேட துஆ பிரார்த்தனையும் மாளிகைக்காடு ஜும்மா பள்ளியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது மாளிகைக்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 26 ம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற பலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், விசேட துஆ பிராத்தனையும் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில், பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

கௌரவிக்கப்பட்ட மீட்புப் பணியினர்

தொடர்ச்சியாக 5 நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டு ஐந்து மாணவர்களை உயிருடனும், 06 மாணவர்கள் அடங்களாக 08 பேரின் ஜனாஸாக்களை மீட்கவும் இயற்கை சீற்றங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு களப்பணி செய்த மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல் வள மீனவர் கூட்டுறவு சங்கம், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, காரைதீவு இராவணா அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.  

மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு | Honors To Rescue Operators In Mawadippalli

அத்துடன் இந்த நிகழ்வில் கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், நம்பிக்கையாளர் சபை ஆலோசகர் ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ் உள்ளடங்களாக நம்பிக்கையாளர் சபையினர், ஜமாஅத்தார் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

முட்டை - கோழி இறைச்சியின் விலை தொடர்பாக வெளியான மகிழ்ச்சி தகவல்

முட்டை - கோழி இறைச்சியின் விலை தொடர்பாக வெளியான மகிழ்ச்சி தகவல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery