சாய்ந்தமருதுவில் இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி கௌரவிப்பு

Rakshana MA
பெண்களை போற்றும் விதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா சாரிக் காரியப்பருக்கு இன்று(08) சாய்ந்தமருதுவில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி வங்கி சங்கத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச மகளிர் தினம்
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பொறுப்பு முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு இல்லாத சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்றவை கிடைத்திட சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய விழிப்புணர்வை சர்வதேச மகளிர் தினம் வலியுறுத்துகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

