சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கெளரவித்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Nov 17, 2024 05:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று(16) நடைபெற்றுள்ளது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 2023 (2024) க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள், சாதாரண தர பரீட்சைகளில் அதி விசேட சித்திபெற்ற 9A, 8AB, 8AC மாணவிகள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய, சர்வதேச ரீதியாக திறமைகளை வெளிப்படுத்திய மகத்தான மாணவிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டியே குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தூய அரசியல் முன்னெடுப்போம் : இம்ரான் மஹ்ரூப்

தூய அரசியல் முன்னெடுப்போம் : இம்ரான் மஹ்ரூப்

சாதனையாளர்களுக்கான கௌரவம்

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹத்துல் நஜீம், கௌரவ அதிதியாக இக்கல்லூரியின் முதல் வைத்திய கலாநிதி மர்சுக்கா உவைஸ், விசேட அதிதிகளாக கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எம். மலிக் அஸ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு விடிவெள்ளியாக திகழும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, வரலாற்றில் 54 ஆண்டுகள் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சி மற்றும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது.

honoring achievers in kalmunai mahmud college

அகில இலங்கையில் பெயர் பெற்று விளங்கும் இக்கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து முஸ்லிம் பெண் மாணவிகள் இக்கல்லூரியை நாடி வந்து கல்வி கற்று சர்வதேச ரீதியில் புகழ்பெற்று வருகின்றன.

மேலும், இக்கல்லூரியானது 1971ல் ஆரம்பித்த போதிலும், கடந்த காலங்களை விட 2023ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகமான மாணவிகள் க.பொ.த. சாதாரண தரத்தில் அதிகமான விசேட சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை பெற்றதுடன் உயர்தரம் கற்பதற்கு தெரிவாகியமையும் க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அதிகளவான உயர் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளமையும் ஒரு சிறப்பம்சமாகும்.

2023 (2024)ம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயிரியல் விஞ்ஞான பீடத்துக்கு தெரிவான (34) மாணவிகள், பிரயோக விஞ்ஞான தெரிவான (05) மாணவிகள், உயிர் முறைமை தொழினுட்ப தெரிவான (09) மாணவிகள், கலைப் பிரிவுக்கு தெரிவான (54) மாணவிகள், வர்த்தக பிரிவுக்கு தெரிவான (14) மாணவிகளுக்கும், 2023 (2024)ல் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 100 வலயங்களில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு ஏதுவாக இருந்த 9A, பெற்ற (26) மாணவர்கள், 8A,B & 8A,C (33) பெற்ற மாணவிகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களின் பங்கேற்புடன் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிக்கழிப்பில் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்ட துஆ பிரார்த்தனை

வெற்றிக்கழிப்பில் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்ட துஆ பிரார்த்தனை

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம்: ஜெகதீஸ்வரன் பெருமிதம்

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம்: ஜெகதீஸ்வரன் பெருமிதம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery