ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று

Srilanka Muslim Congress Rauf Hakeem Government Of Sri Lanka Local government Election
By Laksi Dec 20, 2024 05:12 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (20) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டமானது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem)தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது சமகால நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

அரசின் செயற்பாடுகள்

விசேடமாகக் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களும் ஆராயப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று | High Council Meeting Of Slmc Today

அத்தோடு, அரசின் செயற்பாடுகள் மற்றும் அவை தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை

5000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW