மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா

Israel Iran World
By Shalini Balachandran Aug 04, 2024 07:06 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் வான்வழி தாக்குதல் நடத்தியதால் மத்தியக்கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் (Iran) ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் (Masoud Pezeshkian) பதவியேற்பு விழாவில் பங்கேற்க  ஹமாஸ் (Hamas) அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா (Ismail Haniyeh), ஈரான் சென்ற நிலையில் கடந்த 31 ஆம் திகதி தலைநகர் டெஹ்ரானில் (Tehran) உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில்  இதனை மறுத்த ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.

குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை

குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை

இஸ்ரேல் மீது தாக்குதல்

இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என  தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்மாயில் ஹனியா கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா | Hezbollah Rocket Attack On Israel

இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW