நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் மழை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jul 11, 2025 03:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (11) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்..! வெளியான தகவல்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்..! வெளியான தகவல்

கனமழை வாய்ப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy rain warning map Sri Lanka – July 11

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமேல், வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.  

வெளிச்சத்துக்கு வரும் கிழக்கின் இருண்ட பக்கம்: பிள்ளையானை வைத்து காய்நகர்த்தும் அரசு

வெளிச்சத்துக்கு வரும் கிழக்கின் இருண்ட பக்கம்: பிள்ளையானை வைத்து காய்நகர்த்தும் அரசு

நீடித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்

நீடித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW