முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு
காரைதீவு பிரதேசத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்குமான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வசீரின் தலைமையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
சுகாதார மேம்பாட்டுக்காக கருத்தரங்கு
இந்த கருத்தரங்கிற்கு வளவாளராக வைத்தியர் முஹம்மட் ஹில்மி கலந்து கொண்டு சுகாதார மேம்பாட்டு விரிவுரைகளை வழங்கியுள்ளார்.
அத்துடன் அனைத்து முன்பள்ளி பாடசாலை சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிப்பை மேற்கொள்வதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒவ்வொரு கிழமையும் முன்பள்ளி பாடசாலைகளுக்கான பிள்ளைகளின், பெற்றோர்களுக்கான கருத்தரங்கு நடாத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கருத்தரங்கில் கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவின் உதவி கல்வி பணிப்பாளர், காரைதீவு பிரதேச முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட முன்பள்ளி பாடசாலை ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






