திருகோணமலையில் சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கபட்ட விசேட பரிசோதனை
Trincomalee
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
Eastern Province
By Rakshana MA
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை - தோப்பூர் (Thoppur) பொதுச் சுகாதார பிரிவில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றையதினம் (19) காலை வீட்டுக்கு வீடு விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கையில், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கடற்படையினர், டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.
டெங்கு கட்டுப்பாடு
இதன்போது டெங்கு நோய் பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு, டெங்கு பரவாமல் வீட்டுச் சூழலை துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






