உப்பு இறக்குமதி தடை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சினாலோ அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலோ எவ்வித இடையூறுகளும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகம் ரீ.பி.ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
மேலும், உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களினால் பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உப்பு இறக்குமதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்வாறான எவ்வித இடையூறுகளோ அல்லது தடைகளோ உப்பு இறக்குமதி செய்வதற்கு கிடையாது.
மேலும் உப்பு இறக்குமதி செய்வதற்காக கடந்த 22ம் திகதி வரையில் 117 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், சுமார் 150000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், உப்பு துறைமுகத்தை அடைந்ததன் பின்னர் அவற்றை வேகமாக விடுவிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |